இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, ஜீவன் தொண்டமானுக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு உறுதிப்படுத்தியது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த ஜீவன் தொண்டமான், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
தொடர்புடைய செய்தி :- ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார்