கொவிட் – 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக எட்டு வயதான சிறுவனொருவன் முன்னெடுத்த கவனயீர்ப்பு நடைபவனிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை இந்த நடைபவணியை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.
கல்முனை பிரதேச செயலக வளாகத்திலிருந்து இன்று காலை 9.30 அளவில் இந்த நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது.
தந்தை மற்றும் மகன் ஆகியோர் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அக்கரைப்பற்று நோக்கி நடைபவனி சென்றுக்கொண்டிருந்த தருணத்திலேயே நீதவான் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த சிறுவனினால் ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையிலான மகஜரொன்று சாய்ந்தமருது பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)