சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என தான் கருத்து வெளியிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேஷய பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் கலாநிதி ஜெனிஃபர் பெரேரா தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு, அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே தனது கருத்தின் பொருள் எனவும் அவர் கூறியுள்ளதாக பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் அந்த கருத்தை தன்தோன்றித்தனமாக கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் கருத்துக்கு அமையவே, தான் இந்த கருத்தை வெளியிட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். (Deshaya)
Discussion about this post