புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவருக்கான ஆகக்கூடிய வயதெல்லையொன்றை நிர்ணயிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இதன்படி, ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர், 55 வயதை பூர்த்தி செய்திருத்தல் அத்தியாவசியமானது என்ற யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது வேறு தேர்தல்களுக்கோ தற்போதுள்ள அரசியலமைப்பில் வயதெல்லை நிர்ணயிக்கப்படவில்லை.
எனினும், 20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிடும் ஒருவர், தனது 30 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.