நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்க முடியாது போனால், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளை இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்க முடியாது போனால், குறித்த பரீட்சைகளை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.