ஹம்பாந்தோட்டை பகுதியில் சொகுசு காரொன்று மோதியதில் யானை குட்டியொன்று இறந்துள்ளது.
மாத்தறை – திஸ்ஸமஹராம பிரதான வீதியில் இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை – கட்டுவெவ பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கடந்த வாரம் டிபர் வாகனமொன்று மோதியதில், யானை குட்டியொன்று இறந்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் வாகன விபத்துக்களில் ஒரே இடத்தில் இரண்டு யானை குட்டிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானைகள் வீதியை கடக்கும் இடங்களில், அதற்கான சமிக்ஞைகள் இல்லாமையே, இவ்வாறான விபத்துக்கள் நேர்வதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. (TrueCeylon)
News Sources :- NewsWire.lk
Photo credit :- Accident first