தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய பழகிய நிலையிலேயே, எம்.ஏ.சுமந்திரனுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
எம்.ஏ.சுமந்திரனின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை வெளிவரும் வரை, அவருடன் நெருங்கி பழகிய 40 பேரை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கிலுள்ள பிரதான கட்சிகளைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)
Discussion about this post