இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பிற்காக கலந்துக்கொள்ளவிருந்த 8 ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ளவிருந்த சுமார் 200 ஊடகவியலாளர்களுக்கு கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாகவே குறித்த ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.
முதலில் 18 பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், 8 ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தொற்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலத்திரனியல் ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் என அறிய முடிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர்கள் கடமையாற்றும் ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post