திருச்சி – மணப்பாறை – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் செய்தியை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரின் குழந்தையொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவனை மீட்கும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
தூத்துக்குடி திரேஷ்புரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ்வரன் – நிஷா தம்பதிகளின் இரண்டு வயது குழந்தையான ரேவதி சஞ்சனாவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெற்றோர் தொலைக்காட்சி செய்தியை பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தை காணாமல் போயுள்ளது,
அதனைத் தொடர்ந்து, குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.
வீட்டிற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியொன்றில் குழந்தை வீழ்ந்து மூச்சு திணறி உயிரிழந்துள்ளதை பெற்றோர் அவதானித்துள்ளனர்.
குழந்தையை பெற்றோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், காப்பாற்ற முடியவில்லை என தமிழக செய்திகள் குறிப்பிடுகின்றன.