அரசாங்கம் கொவிட் நிலைமை தொடர்பில் கருத்திற் கொள்ளாது, எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கான நிதியொதுக்கீட்டை குறைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்துகின்றார்.
இந்த ஆண்டில் சுகாதார துறைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை விடவும், குறைவான நிதித் தொகையே அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சுகாதாரத்துறைக்கான நிதியொதுக்கீட்டை குறைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் வைரஸ் தொற்று பரவிவருகின்ற இந்த தருணத்தில், சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக பேணுவதற்கு, புதிய பரிசோதனைகள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்து வகைகள் ஆகியவற்றை கொள்வனவு செய்தல் அத்தியாவசியம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்காக பாரிய நிதித் தொகை அத்தியாவசியம் என அவர் கூறுகின்றார்.
இந்த அச்சுறுத்தலான நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாது செயற்படுகின்றமையானது, எதிர்வரும் ஆண்டு நாட்டின் சுகாதார நிலைமை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.