சீரம் இன்ஸ்டிடியுட் ஒப் இந்தியா பிரைவெட் லிமிடட் (SIIPL) உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமாக மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் பங்குதாரராக உள்ளதாக வர்தன் தெரிவித்தார்.
உலகின் மொத்தம் 170 நாடுகளில் இந்நிறுவனத்தின் தடுப்பூசி பயன்படுத்தப்படுகின்றது.
உலகில் பிறக்கும் ஒவ்வொறு 3வது குழந்தையும் இந்நிறுவனத்தில் தடுப்பூசியை பயன்படுத்துகின்றது என சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று பரவல் நேரத்தில் இத்தடுப்பூசியை கண்டுபிடித்து மேம்படுத்துவதற்கான அனுமதி மற்றும் சான்றிதலை சீரம் நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் “அத்மனிப்பார் பாரத் ” திட்டத்தின் ஒரு பங்காகும்.
இந்த நிமோகோகல் தடுப்பூசியானது “நிமோசில்” என்ற பெயரில் நியாயமான விலையில் சந்தையில் கிடைக்கும்.
இத்தடுப்பூசியானது ஐந்து முறை ஆய்வக மற்றும் கள பரிசோதனையின் பின்னர் இந்திய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் வெவ்வேறான இன மக்களின் வயதானோர் , சிறு பிள்ளைகள் மற்றும் குழந்தைகளிடம் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான தடுப்பூசி என தனது அறிக்கையில் வர்தன் குறிப்பிட்டார்.
இத்தடுப்பூசிக்கான அனுமதிப்பத்திரத்தை விசேட தேர்வுக்குழுவின் அனுமதியுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் நாயக்கத்தால் யூலை மாதம் 2020ல் வழங்கப்பட்டது.
முக்கியமாக இந்த கோவிட் தொற்று காலத்தில் இத்தடுப்பூசி கண்டுபிடிப்பானது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமில்லாமல் வெளிநாடுகளின் விலை கூடிய மருந்துகளுக்கு ஈடாக அமைவதால் இது இன்றுமொரு மைல்கல்லாக அமைகின்றது.
Discussion about this post