சிவனொளிபாதமலை யாத்திரைக்கு, வருகைத் தரும் யாத்திரிகளினால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டும் அபாயம் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு குழு தெரிவிக்கின்றது.
அதனால், ஜனவரி மாதம் சிவனொளிபாதலைக்கு வருகைத் தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த குழு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் பெருந்தோட்ட பகுதிகளை அண்மித்த பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பீ.ஆர்.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.
சில பகுதிகளுக்கு செல்வதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையிலேயே, சிவனொளிபாதலை விஜயத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)