புஸா சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
சிறைச்சாலையில் வெளிபுறத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர், நீர்கொழும்பு – கம்புறுகொட – வடுமுல்லே கெதர பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ், நீர்கொழும்பு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. (True Ceylon)