நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
இதன்படி, சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 437 வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் காலை 8 மணிக்கு முன்னர் அனைவரும் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
குருவிட்ட, புஸா, வெலிகட, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, பழைய போகம்பர, தும்பர, மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் இதுவரை காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.