இந்த மாதம் முதலாம் திகதி முதல் 17ம் திகதி வரையான காலம் வரை 7479 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 551 ஆண் கைதிகளும், 13 பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்துடன், விடுதலை செய்யப்பட்டவர்களில் 6760 ஆண் சந்தேகநபர்களும், 155 பெண் சந்தேகநபர்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் கூறுகின்றது.
சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெரிசலை குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
சிறைச்சாலைகளில் கொரோனா
சிறைச்சாலைகளில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 3372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 1772 கைதிகளும், 73 அதிகாரிகளும் குணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சிறைச்சாலைகளின் நெரிசலை குறைக்க திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)