பண்டிகை காலத்தில் சிறார்களை தேவையற்ற விதத்தில் வெளயில் அழைத்து செல்ல வேண்டாம் என கொழும்பு ரிஜ்வே ஆரியா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜேசூரிய வேண்டுக்கோள் விடுக்கின்றார்.
தமது வைத்தியசாலைக்கு வருகைத் தரும் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகளவில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பு ரிஜ்வே ஆரியா வைத்தியசாலையில் சுமார் 70 சிறார்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், தேவையற்ற விதத்தில் சிறார்களை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்குமாறும் அவர் வேண்டுக்கோள் விடுக்கின்றார்.
சிறார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுக்கின்றார். (TrueCeylon)