தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது பாதுகாப்பிற்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிங்கள பாதுகாப்பு படையினரை மாத்திரமே வைத்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் இன்று (11) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இலங்கையில் கடமையாற்றி வருவதாக கூறிய அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாப்புக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அருகில் வைத்துக் கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், புலம்பெயர் தமிழர்களுக்காகவும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்திலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாஅம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோரை அவர் பிரிந்ததாக அவர் நினைவூட்டினார். (TrueCeylon)
Discussion about this post