சிங்கப்பூரிலுள்ள ஹோட்டலொன்றில் சுய தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் விக்டோரியா வீதியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியொன்றின் 13ஆவது மாடியில் குறித்த இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்த இளைஞனே சடலமாக நேற்று (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் Management Universityயில் கல்வி பயின்றுவந்த நிஷாட் மாணிக்க டி பென்சேகா என்ற மாணவனின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post