கொரோனா தொற்றுக்கு எல்ககோல் சிறந்தது என்ற எண்ணத்தில் மதுசாரம் அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 3000திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சட்டவிரோத மதுபான விற்பனைகள் ஈரானில் அதிகரித்துள்ள நிலையில், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் கொரோனா தொற்று காரணமாக 3872 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 63,000திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.