சமூக வலைத்தள பாவனையாளர்கள் ஊடகத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படமாட்டார்கள் என ஊடத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் (20) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய கெஹெலிய ரம்புக்வெல, சமூக வலைத்தள பாவனையாளர்கள் ஊடகத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைத்தள ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்தின் முழுமையாக அர்த்தத்தையும், சரியான அர்த்தத்தையும் வெளிப்படுத்தாத வகையிலான செய்தியொன்றே பகிரப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலுள்ள பெரும்பாலான நிதியை, வெளிநாட்டு நிறுவனங்கள் தம்வசப்படுத்திக் கொள்வதாகவும் அவர கூறியுள்ளார்.
டிஜிட்டல் தரவுகள் கட்டுப்பாட்டின் ஊடாக, உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளை தம்வசப்படுத்திக் கொள்ளுவதற்கான முயற்சிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதைவிடுத்து, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் களத்தை பயன்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். (TrueCeylon)
தொடர்புடைய செய்தி :-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த இலங்கையில் இனி பதிவு செய்ய வேண்டும்