இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 5 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தோர் தொடர்பான விபரங்கள்
01.கபுலியந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
02.மொறட்டுவ பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்ணொருவர், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
03.கெட்டவல பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார்.
04.குருநாகல் பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவர், நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
05. அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கடந்த 6ம் திகதி உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post