இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு நகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பேரும், மொறட்டுவை பகுதியில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயுடன் ஏற்பட்ட கொவிட் தொற்றே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்கனவே சிறுநீரக நோய் காணப்பட்ட பின்னணியில், கொவிட் தொற்று ஏற்பட்டமையே உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
மேலும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு மற்றும் இருதய நோய் ஆகியவற்றுடன், கொவிட் தொற்று ஏற்பட்டமையே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, நாட்டில் புதிதாக 229 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17516ஆக அதிகரித்துள்ளது.
5652 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 11806 பேர் குணமடைந்துள்ளனர்.