கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் சாத்தியம் உள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இலங்கையின் பிரபல ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று இருக்குமாயின், அவர்களை வீட்டிற்குள் தங்கியிருக்குமாறும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டிலுள்ள குற்றவியல் சட்டத்திற்கு அமைய, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரினால் இந்த நோய் பரவுமாயின், அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறியுள்ளார்.