கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக கம்பஹா – அட்டுளுகம பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ள, அந்த பகுதியை சூழவுள்ள ஆற்றிற்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொல்கொட ஆற்றின் ஊடாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வேறு பகுதிகளை நோக்கி பயணித்து வருவதாக வெளியான தகவலை அடுத்தே, பாதுகாப்பு பிரிவினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, பொல்கொட ஆற்றில் விசேட பாதுகாப்பு படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிம்மன்துடா பாலத்திற்கு அருகிலிருந்து கெலனிகம வரையான பொல்கொட ஆற்றிற்கும், அதன் கிளை ஆறுகளுக்கும் இடையில் இந்த பாதுகாப்பு படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,
இந்த பாதுகாப்பு கடமைகளில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.