கொவிட்-19 தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,000தை எட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,183 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மொத்தமாக 14715 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களில் 4490 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதேவேளை, இலங்கையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 616900 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 64263 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.