கொவிட் தொற்றினால் மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக, மத்திய மாகாணமே அதிக அச்சுறுத்தல் மிக்க மாகாணமாக காணப்படுகின்றது.
கொவிட் இரண்டாவது அலையினால் மேல் மாகாணத்தில் 36,067 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் 3345 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் 1953 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தென் மாகாணத்தில் 1746 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்திற்கு அடுத்ததாக கிழக்கு மாகாணமே அதிக அச்சுறுத்தல் மிக்க மாகாணமாக காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் 1457 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 652 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post