கம்பஹா – இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவர், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
63 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த நபர் உயிரிழந்ததன் பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக, அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லியூகேமியா தொற்றுடன் ஏற்பட்ட கொவிட் தொற்றே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 46 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், இன்றைய தினத்தில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது