கொவிட்-19 தொற்றுக்காக கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்து, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற சிலர் இந்த ஆயுர்வேத மருந்தை அருந்தியுள்ளனர்.
கேகாலை ஆயுர்வேத மருத்துவரான தம்மிக்க பண்டாரவினால் இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட மருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
எனினும், நாட்டில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு, குறித்த மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
எனினும், தம்மிக்க பண்டார, குறித்த மருந்தை இன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து இந்த மருந்து மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)