இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இறுதியாக 3 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது.
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண்ணொருவரும், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரும், கொழும்பு 09 சேர்ந்த 48 வயதான ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 6 பேரின் உயிரிழப்புக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.
இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட 6 உயிரிழப்புக்களில் 5 உயிரிழப்புக்கள் கொழும்பு மாவட்டத்திற்குள் பதிவாகியுள்ள அதேவேளை, ஒரு உயிரிழப்பு களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
கொவிட் பாதிப்பு
இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,121ஆக அதிகரித்துள்ளது.
8312 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 25,652 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். (TrueCeylon)