இலங்கையில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பிரதேசங்கள் அடங்கலான மொத்த தகவல்களும் இன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களின் படி கொழும்பு மாவட்டத்தில் 7467 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 6065 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 748 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காலி மாவட்டத்தில் 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 202 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் 57 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 31 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
பொலிஸ் கொத்தணியில் 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடி படையில் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றினால் 269 பேர் வெவ்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.