இலங்கையில் கொவிட் வைரஸின் வீரியத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்துக்கொள்வதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கொவிட் வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் மாதாந்தம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்ததாக நினைவூட்டிய அவர், இனிவரும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனைகளை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸின் வீரியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைகின்றமையினாலேயே, இந்த ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், பிரித்தானியாவில் பரவிவரும் வீரியம் அதிகமான வைரஸ் இலங்கையை தாக்குமா என்பது குறித்தும் இந்த ஆய்வுகளில் கண்டறிய முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆய்வுகளுக்கான உலக சுகாதார ஸ்தாபனம் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post