கொவிட் வைரஸ் நீரின் மூலம் பரவாது என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று வைத்தியசாலைகளிலுள்ள கழிவுப் பொருட்கள் நீரில் கலக்கின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுவாசத்தின் ஊடாகவே கொவிட் வைரஸ் பரவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வைத்தியசாலைகளின் கழிவுப் பொருட்கள் நீரில் கலக்கின்றமையினால், வேறு வகையான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், நீரில் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தாம் தலையீடு செய்ய தயாராகவுள்ளதாகவும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post