கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியும் என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை, அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அந்த அறிக்கையை வெளியிடாது தாமதப்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.
குறித்த அறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்துகின்றார்.
குறித்த அறிக்கையில், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற விதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெளிவான அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எனினும், சில தீவிரவாத கொள்கைகளை கொண்டவர்களின் பணய கைதியாக அரசாங்கம் இருக்கின்றமையினாலேயே, அந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடாதுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிலுள்ள அனைவரும், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பரிந்துரை செய்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறுகின்றார்.
இந்த நிலையில், குறித்த அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, நியாயத்தை பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். (TrueCeylon)
Discussion about this post