Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை செய்கின்றமை குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை எந்தவொரு மதத்திற்கும் கிடையாது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவிற்கு மாத்திரமே, தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக கோரிக்கை விடுப்பது சரியான விடயமல்ல எனவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)