கொவிட்-19 தொற்று காரணமாக அதிக அபாயம் மிக்க பகுதியாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
கடந்த 5 தினங்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 1083 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள பின்னணியிலேயே, கொழும்பு மாவட்டம் அபய பகுதியாகவுள்ளதாக டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவிக்கின்றார்.
கம்பஹா மாவட்டத்தில் கடந்த மாதம் காணப்பட்ட அபாய மற்றும் அச்சுறுத்தலான நிலைமை தற்போது கொழும்பு மாவட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம், கடந்த சில தினங்களாக நாளாந்தம் தலா 200ற்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலைமையின் கீழ், மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு டொக்டர் ஹரித்த அளுத்கே கேட்டுக்கொண்டுள்ளார்.