நாட்டில் பரவும் கொவிட் 2ஆவது அலையினால் வடக்கு மாகாணத்தில் 333 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் எந்தவொரு கொவிட் தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என அந்த மையம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் 156 கொவிட் தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 74 கொவிட் தொற்றாளர்களும், வவுனியாவில் 57 கொவிட் தொற்றாளர்களும், கிளிநொச்சியில் 30 கொவிட் தொற்றாளர்களும், மன்னாரில் 16 கொவிட் தொற்றாளர்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் மன்னார் மாவட்டத்திலேயே குறைந்தளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 கொவிட் தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 91 கொவிட் தொற்றாளர்களும், பதுளை மாவட்டத்தில் 77 கொவிட் தொற்றாளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 73 கொவிட் தொற்றாளர்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டங்களில் நேற்றைய தினம் (20) எந்தவொரு கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)