கொவிட் தொற்றாளர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும் அளவை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை சிகிச்சை மத்திய நிலையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பும் நாட்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுவரை காலமும் கொவிட் தொற்றாளர் ஒருவர் 14 நாட்கள் கட்டாயம் சிகிச்சை மத்திய நிலையங்களில்; சிகிச்சை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொவிட் தொற்றாளர் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாயின், அவரை 10 நாட்களில் வீட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டாலும், எஞ்சிய 4 நாட்கள் கட்டாயம் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post