கொவிட்-19 வைரஸ் தொற்று உருவாகிய விதம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நத்தார் தின ஆராதனைகளின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று இயற்கையாக உருவாகிய ஒன்று என்பதை நம்ப முடியாதுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போதைய உலகின் வைத்திய துறையில் மருந்து உற்பத்தியில் பாரிய ஊழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)