இலங்கை : அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை மாத்திரமே, கொவிட் தடுப்புக்கான நாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
கொவிட் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருகின்றமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான இடவசதிகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்படும் தடுப்பூசிகளை, சுகாதார பிரிவினருக்கு, பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ள வயோதிபர்களுக்கு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இடங்களில் பணியாற்றுவோருக்கு முதற்கட்டமாக வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post