இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்புக்கான தடுப்பூசி நாளை (28) இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றிய விசேட விமானம் நாளை முற்பகல் 11 மணிக்கு நாட்டை வந்தடையவுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா சேனேகா கொவிசீல்ட் தடுப்பு மருந்தை இந்தியா இலவசமாக வழங்குகின்றது.
இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 281 என்ற விமானத்தின் மூலம் இந்த மருந்து தொகை நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
1323 கிலோகிராம் எடையுடைய இந்த மருந்து தொகை, அதி குளிரூட்டப்பட்ட கட்டமைப்பில் வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post