ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இன்று உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இந்த இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி மற்றும் ஷன்ன ஜயசுமன ஆகியோரின் தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
www.statehealth.gov.lk என்ற இணையத்தளமே இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த இணையத்தளத்தின் ஊடாக கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொவிட் – 19 தொடர்பிலான தகவல்கள் மற்றும் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான தகவல்களையும் இந்த இணையத்தளத்தின் ஊடாக அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் :-
(TrueCeylon)
Discussion about this post