அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அவசர தேவைகளுக்காக பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலகில் கொவிட் தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையான காலம் வரை முதல் தடவையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவாகும்.
இதன்படி, இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத நாடுகள், எந்தவித சந்தேகமும் இன்றி, பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த தடுப்பூசியை பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பெற்றுக்கொள்ள, யுனிசெப் அமைப்பு நிதியுதவிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
பைசர் தடுப்பூசியை, அமெரிக்கா, கனடா, கட்டார், பஹரேன், மெக்ஸிகோ உள்ளிட்ட சில நாடுகள் தற்போது பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post