ரிட்டிகல தேவிந்த என்ற நபரினால், கொவிட் – 19 தடுப்புக்கான மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சியின் ஊழியர்கள் இந்த மருந்தை நேற்றைய தினம் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரிட்டிகல இராவண பரம்பரையைச் சேர்ந்த தேவிந்த லக்சிறி ரணசிங்க என்ற நபரினால், பழைமையான ஓலைச் சுவடிகளில் பதிவுகளை பெற்று இந்த மருந்தை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மருந்து தொடர்பிலான தகவல்களை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (TrueCeylon)