கொவிட்-19 வைரஸ் தடுப்புக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசியின் தரம் குறித்து ஆராய்ந்து, அதனை அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
அவ்வாறு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயாராகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட் தடுப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடுப்பூசியொன்று பரிந்துரை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே, அதனை நாட்டு மக்களுக்கு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
மக்களின் சுகாதாரம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)