கொரோனா சிகிச்சை நிலையமொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
எம்பிலிபிட்டி − யோதகம பகுதியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் அண்மையில் பூப்புனித நீராட்டு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த மத்திய நிலையத்தில் 13 வயதாக சிறுமியொருவர், வயதுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, குறித்த நிலையத்தில் சிறிய நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (HiruNews)
Discussion about this post