கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கையில் அனுமதி வழங்க முடியும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிக்கின்றது.
தற்போது காணப்படுகின்ற விஞ்ஞான ரீதியிலான தகவல்களை மேற்கோள்காட்டி, அறிக்கையொன்றின் ஊடாக இந்த விடயத்தை அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 31ம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் தாம் இணக்கப்பாடொன்றிற்கு வந்ததாகவும் அந்த சங்கம் கூறுகின்றது. (TrueCeylon)
Discussion about this post