பொலிஸ் திணைக்களத்தில் பரவிவரும் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 612 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 விசேட அதிரடி படை உறுப்பினர்களும் அடங்குவதாக அந்த மையம் குறிப்பிடுகின்றது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 91 பொலிஸாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவோர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.