கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், 25 மாவட்டங்களுக்கும் இராணுவத்தின் 25 சிரேஷ்ட அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த நியமனங்களை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, குறித்த அதிகாரிகள், மாவட்ட இணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள், கொவிட் தொற்றாளர்களை அழைத்து செல்லுதல், மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. (TrueCeylon)
Discussion about this post