கொவிட் தொற்றினால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டியுள்ளது.
கொவிட் தொற்று தொடர்பில் தகவல்களை வெளியிடும் இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 09 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 37 லட்சத்து 46 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமாக உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றினால் அதிக பாதிப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது.
அமெரிக்காவின் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 64 ஆயிரத்து 364 பேர் என கணிப்பிடப்பட்டுள்ளதுடன், 2 லட்சத்து 49 ஆயிரத்து 975 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவிலேயே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 லட்சத்து 73 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளதுடன், 1 லட்சத்து 29 ஆயிரத்து 225 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலில் 58 லட்சத்து 19 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேஸிலில் கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.