இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளதுடன், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,219ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றினால் இறுதியாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் 3 கொவிட் உயிரிழப்புக்களும், நாவலபிட்டிய பகுதியில் ஒரு உயிரிழப்பும் இறுதியாக பதிவாகியுள்ளது.
கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த 90 வயதான பெண்ணொருவர் கொவிட் நியூமோனியா நிலைமையினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா நிலைமை உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நாவலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.
நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், இரணவில கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு மாற்றப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (13) உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா நிலைமை உயிரிழப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர் கொவிட் நியூமோனியா நிலைமையினால் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலேயே அவர் கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post